SJK (T) LDG RINCHING

Tuesday 1 May 2012

Sejarah Sekolah


ரிஞ்சிங் தமிழ்ப்பள்ளியின் வரலாறு

தேசிய வகை ரிஞ்சிங் தமிழ்ப்பள்ளி சிமினி பட்டணத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது. இப்பள்ளி 1940-ல் நிறுவப்பட்டது. இப்பள்ளியை மாண்புமிகு துன் சம்பந்தன் அவர்கள் தோற்றுவித்தார். அச்சமயத்தில், பள்ளி தேசிய நில நிதி கூட்டுறவு தந்தையான துன் சம்பந்தன் அவர்களின் மேற்பார்வையில் இயங்கி வந்தது.

இப்பள்ளி நிறுவப்பட்டபோது இருபத்து ஐந்து மாணவர்களே பயின்று வந்தனர். அச்சமையத்தில் திரு கந்தசாமியின் நிர்வாகத்தின் கீழ் ஐந்து ஆசிரியர்கள் வேலை செய்து வந்தனர். இப்பள்ளியும் அதன் நிலமும் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், இப்பள்ளியின் நிர்வாகம் தேசிய நில நிதி கூட்டுறவின் ஆதரவை சார்ந்திருந்தது.


1943-லிருந்து 1957 வரை இப்பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. 1966-ம் ஆண்டு வரை இப்பள்ளியில் நான்காம் ஆண்டு வரையிலேயே இருந்து வந்தது. 1967-ல் இப்பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை 100-ஆக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து, கல்வி அமைச்சு மேலும் 4 ஆசிரியர்களை அனுப்பி வைத்தது. அவர்கள் முறையே, திருமதி ஜெயலெட்சுமி, திருமதி ரெபெக்கா, திருமதி வீராயி, திரு பாக்கியசெல்வா ஆகியோர் ஆவர்.
இப்பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வந்தது. 1968-ல் இப்பள்ளியில் 172 மாணவர்களுடன் 15 பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் திரு எஸ். இராஜு தலைமையில் இருந்தனர். திரு எஸ்.இராஜு இப்பள்ளியின் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் பெரும் பங்காற்றி வந்தார். அவரின் பெரும் முயற்சியினால் 1975-ல் ஒரு புதிய கட்டடம் உருவானது. 1976-ல் தலைமைப் பொறுப்பை திரு. முகமட் இஸ்மாயில் ஏற்றார். பள்ளி படிப்படியாக வளர்ச்சியடையத் தொடங்கியது. புறப்பாட நடவடிக்கைகளிலும் நடைபோட தொடங்கியது.

1982-ல் திரு நடராஜன் அவர்கள் இப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பதவி ஏற்றார். இவரின் தலைமையின் கீழ் மேலும் ஒரு புதிய கட்டடம் அமைக்கப்பட்டது. இக்கட்டடம் 3 வகுப்பறை, 1அலுவலகம், 1கருவூல மையம் கொண்டது. 1999-ல் திருமதி அங்கம்மா அவர்கள் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். 2002-ல் முதல் 2003 வரை தலைமையாசிரியர் பதவி காலியாக இருந்து வந்தது. 1.3.2003-ல் திருமதி ஜெயலெட்சுமி அவர்கள் இப்பள்ளியின் பதவி ஏற்றார். இவரின் தலைமையின் கீழ் மேலும் ஒரு புதிய கட்டடம் உருவாகியது. திருமதி ஜெயலெட்சுமி 24-8-2008-ல் பதவி ஓய்வு பெற்றார். அப்பொது மாணவர் எண்ணிக்கை 480 ஆகும்.

             1.11.2008-ல் திரு. அப்துல் நாசிர் இஸ்மாயில் பள்ளியின் தலைமையசிரியர் பொறுப்பை ஏற்றார். அன்று முதல் பள்ளியின் எல்லா துறைகளிலும் வளர்ச்சியடையத் தொடங்கியது. யூ.பி.எஸ்.ஆர் தேர்ச்சி விகிதம் படிப்படியாக உயர்ந்து 2011-ல் 49.7% ஐ அடைந்தது. காற்பந்து விளையாட்டில் உலுலாங்கட் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளில் தொடர்ந்து 5 ஆண்டுகள் முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. 2010-ல் பள்ளிக்கு புதிதாக அரசாங்க முழு உதவி பெற்ற பாலர் வகுப்புகள் கிடைக்கப்பெற்றன. 1.8.2011-ல் தித்தியான் டிஜிட்டல் கணினி திட்டதின் கீழ் தகவல் தொடர்பு தொழில்நுட்ப மையம் தொடங்கப்பட்டது. 2012-ல் புத்தகக்கடையும் திறக்கப்பட்டது. இப்பொது பள்ளியில் 603 மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள்.

                                                                                       தயாரித்தவர்,
                                                                                      செ.ஆனந்த ராஜ் 

No comments:

Post a Comment