ரிஞ்சிங் தமிழ்ப்பள்ளியின்
வரலாறு
தேசிய வகை ரிஞ்சிங் தமிழ்ப்பள்ளி சிமினி பட்டணத்திற்கு
அருகாமையில் அமைந்துள்ளது. இப்பள்ளி 1940-ல் நிறுவப்பட்டது. இப்பள்ளியை மாண்புமிகு
துன் சம்பந்தன் அவர்கள் தோற்றுவித்தார். அச்சமயத்தில், பள்ளி தேசிய நில நிதி கூட்டுறவு
தந்தையான துன் சம்பந்தன் அவர்களின் மேற்பார்வையில் இயங்கி வந்தது.
இப்பள்ளி நிறுவப்பட்டபோது இருபத்து ஐந்து மாணவர்களே பயின்று
வந்தனர். அச்சமையத்தில் திரு கந்தசாமியின் நிர்வாகத்தின் கீழ் ஐந்து ஆசிரியர்கள் வேலை
செய்து வந்தனர். இப்பள்ளியும் அதன் நிலமும் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்திற்குச்
சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், இப்பள்ளியின் நிர்வாகம் தேசிய நில நிதி
கூட்டுறவின் ஆதரவை சார்ந்திருந்தது.